ADDED : ஜன 11, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஐகோர்ட் நீதிபதிகளுக்கான சகோதரத்துவ கிரிக்கெட் போட்டி, கோவை எஸ்.என்.ஆர் மைதானத்தில் இன்று நடந்தது. இறுதி போட்டியில் சென்னை -- கேரளா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 15 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 115 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய கேரளா அணி, 15 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

