உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 20, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
சேலம்: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கு, சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜன., 23 வரை சனிதோறும் இரவு, 11:40க்கு புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியே மறுநாள் மாலை, 4:30க்கு கொல்லத்தை அடையும். ஞாயிறு அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு வந்து செல்லும்.
மறுமார்க்கத்தில் கொல்லம் – சென்னை சென்ட்ரல் ரயிலாக நாளை முதல் ஜன., 24 வரை ஞாயிறுதோறும் மாலை, 6:45க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 11:40க்கு சென்ட்ரலை அடையும். திங்கள் அதிகாலை, 3:55க்கு ஈரோடு, 4:57க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
