UPDATED : நவ 20, 2026 06:32 PM
ADDED : நவ 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் இருந்து நல்லாங்குடி செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதன் வழியாக உத்தரகோசமங்கைக்கு நாள் தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் நல்லாங்குடி கிராமம் அருகே உள்ள வேகத்தடையில் எவ்வித வர்ணமும் பூசாமல் உள்ளதால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் வேகத்தடையில் பட்டு அடிக்கடி சேதமடைகின்றன.
எனவே வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும். சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
