தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
ADDED : மே 25, 2025 03:28 PM

சென்னை: கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்(மே25), நாளையும் (மே 26) அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரெட் அலர்ட்
* கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்(மே25), நாளையும் (மே 26)அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருநெல்வேலி, தென்காசி தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.