தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை - பினாங்கு விமான சேவை இன்று துவக்கம்

சென்னை - பினாங்கு விமான சேவை இன்று துவக்கம்

சென்னை - பினாங்கு விமான சேவை இன்று துவக்கம்


ADDED : டிச 20, 2024 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில் இருந்து மலேஷியா நாட்டின் பினாங்கு தீவுக்கு,நேரடி மற்றும் தினசரி விமான சேவை இன்று துவங்குகிறது.

மலேஷியா நாட்டில், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி பினாங்கு. அங்கு செல்ல, சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. சென்னை - பினாங்கு இடையே, தினசரி மற்றும் நேரடி விமான சேவை வேண்டும் என்பது, பயணியரின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்நிலையில், 'இண்டிகோ' நிறுவனம், இன்று முதல் தினசரி மற்றும் நேரடி சேவையை வழங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து அதிகாலை, 2:15 மணிக்கு புறப்படும் விமானம், 6:40 மணிக்கு பினாங்கு சென்றடையும்.

அங்கிருந்து இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, காலை, 10:30 மணிக்கு சென்னை வந்தடையும். 'ஏர்பஸ் ஏ 320' ரக விமானங்கள் இயக்கப்படுவதால், 170க்கும் மேற்பட்டோர், இதில் பயணிக்கலாம்.

சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக செல்வோருக்கு, இந்த சேவை பயன் உள்ளதாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us