உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை சென்னை போலீஸ்காரர் கைது
உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை சென்னை போலீஸ்காரர் கைது
ADDED : பிப் 02, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் வழி மாறிவந்த சிறுமி ஒருவர், அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் உதவி கேட்டுள்ளார். அவர் சிறுமியை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்லாமல் போலீஸ் பூத்திற்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விசாரணையில் தொல்லை கொடுத்தது மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் எனத்தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.