sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்

/

 சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்

 சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்

 சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்

8


ADDED : மார் 01, 2026 06:24 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:24 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'யு.ஜி.சி.,யின் நிதியுதவி வேண்டாம் என்ற முடிவை, சென்னை சமஸ்கிருத கல்லுாரி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதியுதவி சென்னை மயிலாப்பூரில், நுாற்றாண்டு பழமையான சென்னை சமஸ்கிருத கல்லுாரி இயங்கி வருகிறது. மத்திய சமஸ்கிருத பல்கலை திட்டத்தின் கீழ், சென்னை பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்துடன், இந்த கல்லுாரி இயங்கி வருகிறது.

இந்த கல்லுாரி, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் நிதியுதவி பெற்று செயல்படுகிறது.

அதன் விதிமுறைகள், கல்லுாரி செயல்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாததால், யு.ஜி.சி.,யின் நிதியுதவி பெறுவதை நிறுத்த, கல்லுாரி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முடிவை எதிர்த்து, மாணவ - - மாணவியர் நேற்று, கல்லுாரி வளாகத்தில் அமைதி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

நுாற்றாண்டு பழமை யான மதராஸ் சமஸ்கிருத கல்லுாரியில், ஏராளமான மாணவர்கள் சமஸ்கிருதம் பயின்று வருகின்றனர். யு.ஜி.சி., நிதியுதவி மற்றும் மத்திய அரசின் பிற திட்டங்களால், இந்த கல்வி நிறுவனம் பயனடைந்து வருகிறது.

மறுபரிசீலனை தற்போது, யு.ஜி.சி., வழங்கும் நிதியுதவியை நிறுத்த, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், பேராசிரியர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். நிதியுதவி நிறுத்தப்பட்டால், பேராசிரியர்களின் ஊதியம் குறையும். அதனால், ஒட்டுமொத்த பேராசிரியர்களும், கல்லுாரியை விட்டு வெ ளியேறும் நிலை உண்டாகும்.

மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படும். மாணவர்களின் தேசிய அளவிலான பங்களிப்புகளும் பாதிக்கப்படும். கல்லுாரி நிர்வாகம் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us