தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை

சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை

சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை


ADDED : பிப் 02, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில் இருந்து அயோத்திக்கு நேற்று முதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டது.

அயோத்தி செல்லும் ராம பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கப்படும் என்று, 'ஸ்பைஜெட்' விமான நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி சென்னை- - அயோத்தி- - சென்னை இடையே, நேரடி விமான சேவை நேற்று துவங்கியது.

முதல் நாளில், 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமான சேவை தினம் உண்டு.

சென்னையில்இருந்து தினமும் பகல் 12:50க்கு புறப்படும் விமானம், மாலை 3:25 மணிக்கு அயோத்தி சென்றடையும்.

மாலை 4:10க்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு, சென்னை வந்தடையும்.

இந்த விமானத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 5,810 ரூபாய். அத்துடன் வரிகள் தனியாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், பயணியர் எண்ணிக்கை டிக்கெட் முன்பதிவு நேரம் போன்றவற்றுக்கு தகுந்தார் போல, டிக்கெட் கட்டணம் மாறுபடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us