உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 09:54 PM

அ நிறம் | அளவு
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கும் எனக்கு, 4 வயதிலேயே, செஸ் ஆட்டத்தில் விருப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட அளவிலான போட்டியில், 7 வயது பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றேன். தற்போது 1,575 ரேட்டிங் புள்ளிகள் வைத்துள்ளேன்.
துருவன், கோவிலம்பாக்கம்
வேலம்மாள் அனெக்ஸ் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறேன். இந்த போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றேன். வெற்றி தோல்வி குறித்து, எனக்கு கவலை இல்லை. இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதும், ஒரு வகை வெற்றி தான். ஏழு சுற்று போட்டிகளும் நல்ல அனுபவத்தை தந்தன.
தனிஷ் விஷ்ணு
மேல அயனம்பாக்கம்
