பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 7 சிறப்பு நீதிமன்றங்கள் முதல்வர் அறிவிப்பு
பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 7 சிறப்பு நீதிமன்றங்கள் முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜன 11, 2025 09:32 PM
சென்னை:''பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில், சென்னை, மதுரை உள்ளிட்ட ஏழு இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
1பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில், ஏழு தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்
2இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும்.
பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில், தமிழக சிறைத்துறை விதிகளில் திருத்தம் செய்யப்படும்
3சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பிக்கவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும், 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்
4மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 3,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்
5இந்த அரசு பதவி ஏற்ற பின், பட்டியலின மக்களுக்கு, 2.67 லட்சம் மனைகளை வரன்முறைபடுத்தி, இ - பட்டா வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

