'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட செயல்பாடு பற்றி முதல்வர் ஆலோசனை
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட செயல்பாடு பற்றி முதல்வர் ஆலோசனை
ADDED : ஜூலை 23, 2025 12:17 AM
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட செயல்பாடு பற்றி ஆலோசனை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட செயல்பாடு குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடி, அவர் அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம் என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி, தலைமை செயலர் முருகானந்தத்துடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 15ம் தேதி, தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ள, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். கடந்த, 21ம் தேதி வரை, 5.74 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்ற விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
அட்டவணையில் குறிப்பிட்டபடி முகாம்களை நடத்த வேண்டும். முகாம்களுக்கு மனு அளிக்க வரும் மக்களுக்கு, தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
பெறப்படும் மனுக்களின் மீது, குறிப்பிட்ட காலத்திற்குள், எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.