தேவர் குருபூஜையில் பங்கேற்க ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர்
தேவர் குருபூஜையில் பங்கேற்க ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர்
ADDED : அக் 24, 2025 12:38 AM
சென்னை:முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் 30ம் தேதி ராம நாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், இன்று தென்காசி செல்ல திட்டமிட்டிருந்தார். மழை காரணமாக அப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 28ம் தேதி தென்காசி செல்ல உள்ளார். அன்று சென்னையில் இருந்து விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக, தென்காசி செல்கிறார். அங்கு மறுநாள் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இரவு மதுரை செல்கிறார். அங்கு தங்கிவிட்டு, 30ம் தேதி, தேவர் குரு பூஜையையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின் மதுரையில் இருந்து காரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு தேவர் நினைவிடத்திற்கு சென்று, குரு பூஜையில் பங்கேற்க உள்ளார். அதன்பின் மதுரை சென்று, இரவு சென்னை திரும்ப உள்ளார்.