பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விரைவில் அறிக்கை அளிக்க திட்டம்
பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விரைவில் அறிக்கை அளிக்க திட்டம்
ADDED : அக் 24, 2025 12:37 AM
சென்னை:பாலியல் புகாரில் சிக்கிய, அரசு பல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை, விரைவில் அரசிடம் மருத்துவ கல்வி இயக்குநரகம் சமர்ப்பிக்க உள்ளது.
சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரியில், வாய் நோய் குறியியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் ஐ.பொன்னையா. இவர் மீது முதுநிலை மருத்துவ மாணவியர், துறை சார்ந்த பெண் ஊழியர்கள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதனால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, சென்னை மருத்துவக்கல்லுாரி முதல்வர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில், பொன்னையா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விசாரணை அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
முதற்கட்ட விசாரணையில், பொன்னையா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடைப்படும். இந்த விவகாரத்தில் அவரது தரப்பு விளக்கமும் பெறப்பட்டுள்ளது.
இதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பின், பொன்னையா மீதான நடவடிக்கையை அரசு எடுக்கும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.

