மக்களை தேடி மருத்துவம் திட்டம்: முதல்வர் பெருமிதம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம்: முதல்வர் பெருமிதம்
ADDED : ஏப் 29, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'மக்களை தேடி மருத்துவம் திட்டம், உயர் ரத்த அழுத்தத்தை 17 சதவீதம், நீரிழிவு நோயை 16.7 சதவீதம் கட்டுப்படுத்தி உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மருத்துவ சேவைகளை மட்டுமல்ல, அதன் வழியே சிறப்பான முடிவுகளையும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் அளிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை, 17 சதவீதம், நீரிழிவு நோயை, 16.7 சதவீதம் கட்டுப்படுத்தி, பொது மருத்துவ சேவையின் வெற்றிக்கான அளவுகோலை மாற்றி அமைத்து வருகிறது.
மக்கள், மருத்துவமனைகளை தேடி வருவதற்காக காத்திராமல், மக்களின் வீடுகளை நாடிச் சென்று ஈட்டிய வெற்றி இது. இந்தியா முழுதும் பொது மருத்துவ சேவைக்கான மாதிரியாக இது மாறியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

