'விபத்தில்லா கோவை'யை உருவாக்க முதல்வர் தலைமையில் உறுதிமொழி
'விபத்தில்லா கோவை'யை உருவாக்க முதல்வர் தலைமையில் உறுதிமொழி
ADDED : அக் 10, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:'நான் உயிர் காவலன்' திட்டத்தின் ஒரு பகுதி யாக, விபத்தில்லா கோவையை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர்.
கோவையில் சாலை விபத்துகளை பூஜ்யமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம், மாநகர போலீஸ், உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் நிகழ்ச்சி நேற்று பல்வேறு இடங்களில் நடந்தது.
கோவை அரசு கலை கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க பல்வேறு கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி ஏற்றனர்.