பெண்கள் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் முதல்வர் ரேகா குப்தா அறிவுறுத்தல்
பெண்கள் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் முதல்வர் ரேகா குப்தா அறிவுறுத்தல்
ADDED : மார் 08, 2026 12:58 AM

புதுடில்லி: “பொறுப்பான பதவிகளில் உள்ள பெண்கள், மற்ற பெண்கள் முன்னேற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி நடத்தும், பெண் சிந்தனைத் தலைவர்களின் தேசிய மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
அடுத்த தலைமுறை பெண்கள் சிறந்த வாய்ப்புகளை பெற பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம் நாடு முன்னேறி வருகிறது.
இந்த நேரத்தில் பெண்கள் தைரியத்தையும் வாய்ப்புகளையும் பெறுவது மிகவும் முக்கியம். பொறுப்பான பதவிகளில் உள்ள பெண்கள், மற்ற பெண்களும் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்ட வேண்டும்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் கையைப்பிடித்து ஒன்றாக முன்னேற வேண்டும்.
இதுபோன்ற மாநாடு பெண்கள் பல்வேறு துறைகளில் பங்கேற்க வழிவகுக்கிறது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், பெண்கள் முன்னேறுவதற்கான உந்துதலை பெறலாம். மாநாட்டில் நடக்கும் விவாதங்கள் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாடு இன்று நிறைவடைகிறது.
சமிதி தலைவர் சாந்த குமாரி, துணைத் தலைவர் அஞ்சு அகுஜா, செயலர் சிவானி மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

