தாளமுத்து, நடராசனுக்கு சிலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தாளமுத்து, நடராசனுக்கு சிலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜன 26, 2025 01:03 AM
சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில், ஈ.வெ.ரா.,வால் திறந்து வைக்கப்பட்ட தாளமுத்து, நடராஜன் நினைவிடத்தை, 34 லட்சம் ரூபாயில் தமிழக அரசு புதுப்பித்துள்ளது. தமிழ் மொழி தியாகிகள் நினைவு நாளான நேற்று, இதை முதல்வர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தாளமுத்து, நடராசன், தருமாம்பாள் ஆகியோரின் படங்களுக்கு மலர் துாவியும், அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வர் உதயநிதி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தித்துறை செயலர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் வைத்திநாதன் பங்கேற்றனர்.
இது தொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வி.சி., தலைவர் திருமாவளவன் கோரிக்கையை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து, நடராசன் மாளிகையில், அவர்களது சிலைகளை நிறுவிடுவோம். தமிழைக் காக்க தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

