பழமைக்கு பழமை; புதுமைக்கு புதுமை: மன்னரையே எதிர்த்து கேள்வி கேட்டது மாமதுரை!
பழமைக்கு பழமை; புதுமைக்கு புதுமை: மன்னரையே எதிர்த்து கேள்வி கேட்டது மாமதுரை!
ADDED : ஆக 08, 2024 11:09 AM

மதுரை: 'தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை' என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் தான் மதுரை. சென்னைக்கு அடுத்து 2வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது மதுரை. மாபெரும் பண்ணாட்டு விழாவாக சித்திரை திருவிழா நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது. திமுக இளைஞரணி துங்கப்பட்ட இடமும் மதுரை தான்.
நவீன வசதிகள்
பழமை மாறாமல் ஊரை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நவீன வசதிகளை தர வேண்டும். பண்பாட்டு விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். காலந்தோறும் மதுரை மாநகரம் மாறிய காட்சிகள், மதுரை தமுக்கம் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மாமதுரை விழாவை கொண்டாட வேண்டும். பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய் இளைஞர்கள் ஊரை போற்றி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.