sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

/

திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்


ADDED : ஆக 01, 2025 09:41 PM

Google News

ADDED : ஆக 01, 2025 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்ததுடன், பல புதிய பணிகளுக்கும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்.

அதன் விபரம்:

 திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பில், 63,200 சதுர அடியில், 'மினி டைடல் பூங்கா' கட்டப்பட உள்ளது. இதன் வாயிலாக, 600 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

 சுற்றுலாத்துறை சார்பில், தென்காசி - குண்டாறு அணையில் 1.50 கோடி ரூபாயில் வரவேற்பு மையம், உணவகம்; திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரியில், 2.98 கோடி ரூபாயில், நுழைவு பகுதி, உணவக கட்டடம் கட்டப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கடற்கரையில், 3.06 கோடி ரூபாயில் படகுத்துறை, நடைபாதை உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மதுரையில் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில், 7 கோடி ரூபாயில் புதிய உணவக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

 சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில், 6.84 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய நிர்வாக கட்டடத்தையும், முதல்வர் திறந்து வைத்தார்.

 தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை.

தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளனத்தின் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகளை முதல்வரிடம் காண்பித்து, சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வாழ்த்து பெற்றார்.

 அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், 10.23 கோடி ரூபாய்; கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயிலாக, 12.3 கோடி ரூபாய், தமிழக அரசின் பங்கு தொகையாக வழங்கப்பட்டது.

இதற்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us