பன்னாட்டு மாநாடு அரங்கம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
பன்னாட்டு மாநாடு அரங்கம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : மே 29, 2025 11:52 PM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் 525 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்.
கிழக்கு கடற்கரை சாலையில், 37.99 ஏக்கர் நிலப்பரப்பில், 10,000 பேர் அமரக்கூடிய அளவில், 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம்; 5,000 பேர் அமரக்கூடிய அளவில், 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம்; 1,500 பேர் அமரக்கூடிய கலையரங்கம் என பல்வேறு வசதிகளுடன், 5.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
மையம் முழுதும் குளிரூட்டும் வசதி, 'லிப்ட்' வசதி, 1,638 கார்கள், 1,700 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு, தலைமை செயலர் முருகானந்தம், பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா கலந்து கொண்டனர்.