அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : அக் 04, 2025 07:07 AM

சென்னை: காசா மீது தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து, வரும் 8ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
காசா மீது இனப் படுகொலை களை, இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம், சென்னையில் வரும் 8ம் தேதி நடக்கவுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
காசா மீது இனப் படுகொலைகளை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.