ADDED : ஜன 08, 2026 01:46 AM

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்திட்ட அனைத்து எம்.பி.,க்களும், மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர், அமைச்சர் ரகுபதி என அனைவரையும் விசாரிக்க வேண்டும். தி.மு.க., - காங்., கூட்டணி வலுவிழந்துள்ளது. கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி ஆகியோர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தி.மு.க.,வோடு இருப்பதா, த.வெ.க., உடன் செல்வதா என காங்., குழப்பத்தில் உள்ளது. எங்கள் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளது என பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின், தி.மு.க., முதலில் பரிசோதனை செய்ய வேண்டும்.
தி.மு.க.,வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இல்லாமல் உள்ளார். ஒற்றுமையாக, உறுதியாக எதிர்த்தால் தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும். அதனால், தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும். அப்படி செய்தால், த.வெ.க., அசைக்க முடியாத சக்தியாக மாறும்.
- தமிழிசை, மூத்த தலைவர், பா.ஜ.,

