ADDED : டிச 21, 2025 01:29 AM

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டதால், முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன், தீபம் ஏற்றுவதை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழக அரசு, ஹிந்து விரோத மனப்பான்மை யுடன் தீபம் ஏற்ற விடவில்லை.
ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது, ஹிந்துக்களை மன வேதனையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்ற முருக பக்தர், தீபம் ஏற்றுவதை தடுக்கும் தி.மு.க., அரசின் நடவடிக்கையை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்துள்ளார். ஆன்மிக பூமியான தமிழகத்தில், ஹிந்துக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒரு ஹிந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் அவல நிலை உள்ளது. பூர்ணசந்திரன் இறப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
- காடேஸ்வரா சுப்பிரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி

