ADDED : நவ 21, 2024 07:43 PM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், இன்று இரவு, 7:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கலந்து கொள்ள வேண்டும் என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 25-ம் தேதி முதல், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
மேலும், வக்பு சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. எந்தெந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து, இன்று நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து வலியுறுத்திப் பேச அறிவுறுத்தப்படுவதோடு, சில விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.