ADDED : அக் 16, 2025 07:47 PM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
சட்டசபையில் முதல்வர் பேசியதாவது:
தமிழக பா.ஜ., கட்சி தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நாகேந்திரனுக்கு, இன்று பிறந்த நாள். அவரை பொறுத்தவரையில் கட்சி பாகுபாடு இன்றி அன்புடன், அமைதியுடன் பேசக்கூடியவர்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், விமர்சனங்கள் செய்யும்போது பொறுமையாக, அமைதியாக பேசுவார். வெளிநடப்பு செய்யும்போது சிரித்துக்கொண்டே செல்வார்.
யாருக்கும் எந்தவித கோபம் வராமல் பழகக்கூடியவர். அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதியாக விளங்ககூடியவர் நாகேந்திரன், 64 வயது முடிந்து 65வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அவருக்கு என் சார்பிலும், அமைச்சர்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பிலும் வாழ்த்துகள். இதேபோல, என் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள முத்துசாமிக்கும் இன்று பிறந்த நாள். அவருக்கும் என் வாழ்த்துகள்.
இவ்வாறு முதல்வர் வாழ்த்தினார்.
இதை தொடர்ந்து, சபையில் வைக்கப்பட்டுள்ள திரையில், முதல்முறையாக புகைப்படத்துடன் நாகேந்திரனுக்கு வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டது.