sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடியோ பதிந்தவர் கைது; மூதாட்டிக்கு போலீஸ் வலை: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

/

வீடியோ பதிந்தவர் கைது; மூதாட்டிக்கு போலீஸ் வலை: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

வீடியோ பதிந்தவர் கைது; மூதாட்டிக்கு போலீஸ் வலை: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

வீடியோ பதிந்தவர் கைது; மூதாட்டிக்கு போலீஸ் வலை: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

44


ADDED : டிச 28, 2024 03:28 PM

Google News

ADDED : டிச 28, 2024 03:28 PM

44


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் இருப்பதாகவும், அவர் தனது ஆட்சியை சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் மெட்ரோ தூணில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தைப் பார்த்து மூதாட்டி ஒருவர் மண்ணை வீசிய காட்சி வைரலான நிலையில், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்த பிரதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த, முதல்வர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியது.

, குழந்தைகள், வயது முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

நியாயப்படி, முதல்வர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, வீடியோவை தனது சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரைக் கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.

வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜா, பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.,வினருக்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சாயத்து செய்யப் போன கேவலமான வரலாறு கொண்டவர்.

உங்கள் ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா?

கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us