ADDED : மே 06, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சுடலை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது பெற்றோர் 2019ல் வாகன விபத்தில் இறந்தனர். சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர். முதல்வர் நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சம் இழப்பீடு கோரி கலெக்டர், திருச்செந்துார் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். அதை பயனாளிகள் பட்டியலில் பதிவு செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். அது நிலுவையில் உள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் மனு மூப்பு நிலையை (சீனியாரிட்டி) அடையும் போது, பரிசீலிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.