ADDED : அக் 22, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடைசியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், அவர் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25ம் தேதிகளில், தென்காசி மாவட்டத்தில், முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார்.
இதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக, முதல்வரின் தென்காசி சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.