sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

/

தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

1


ADDED : ஜன 11, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:50 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்' என்ற, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்புக்கு, தமிழக தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:

கடந்த நான்கு ஆண்டுகளாக, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில், 'தி.மு.க.,வின் 2021 தேர்தல் வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்' என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

ஆனால், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பொறுத்தவரை, 100 சதவீதம் எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை.

இதுவரை, மத்திய அரசின் குழுவையும், ஆந்திர அரசின் குழுவையும் கைகாட்டி கொண்டிருந்தனர்; அவை வந்து விட்டன. தற்போது, வழிகாட்டு நெறிமுறைகள் வர வேண்டும் என்று கூறுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, எத்தனை குழுக்களை தான் அமைப்பர்?

தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை, பொங்கல் பரிசாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் அறிவிப்பை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை, பட்ஜெட்டில் அறிவிக்க வலியுறுத்தியும், வரும் 24ம் தேதி மதியம் 1:30 மணிக்கு, உணவு இடைவேளை கூட்டம் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us