உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 10, 2026 08:56 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி:
மின்சாரம் பாயந்து, குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் -–- அருள் விண்ணரசி தம்பதியின் எட்டுமாத குழந்தை மணிகண்டன்.
வீட்டில் நேற்று (நவ.,9) இரவு துாங்கிக்கொண்டிருந்தபோது, குழந்தை மணிகண்டன் திடீரென உருண்டு கீழே விழுந்துள்ளான்.
கட்டில் அருகே மின் விசிறிக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்விட்ச் போர்டில், மணிகண்டனின் உடல் பட்டதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான். கொப்பம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
