ADDED : ஜூலை 23, 2011 04:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கரூரில் ஓட்டல்களில் எச்சில் இலை எடுப்பதற்கும், உணவகங்களை சுத்தப்படுத்துவதற்கும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இதே போல் அங்குள்ள பெட்ரோல் பங்குகளிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலேயே இவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

