தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விஜய்க்கு ஓட்டு கேட்கும் சுட்டி குழந்தைகள்

 விஜய்க்கு ஓட்டு கேட்கும் சுட்டி குழந்தைகள்

 விஜய்க்கு ஓட்டு கேட்கும் சுட்டி குழந்தைகள்


ADDED : ஏப் 19, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பு துக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில், கடந்த 17ம் தேதி, த.வெ.க., வேட்பாளர் சிந்தாமணி ஓட்டு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னேற்பாடுகளை செய்ய வந்த த.வெ.க., நிர்வாகியிடம்,5 வயது குழந்தை ஒன்று, 'அங்கிள் விஜய்க்கு ஓட்டு போட்டுடுங்க' என்றது. உடனே, அவர், 'ஏய், சுட்டி நீ எங்கிட்ட காசு வாங்கறதுக்காகத் தானே இப்படி சொல்றே' என்றார். அந்தக் குழந்தை, 'இல்ல மாமா, காசு வேண்டாம்; நீ விஜய்க்கு ஓட்டு போடு மாமா' என்று கெஞ்சலாக கேட்டது. குழந்தையின் ஆர்வத்தை பார்த்து வியந்த நிர்வாகி, பெட்டிக் கடையில் ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுத்துவிட்டு சென்றார்.

சிந்தாமணி ஓட்டு கேட்டு திரும்பிய போது, அவரைப் பார்க்க, ஏனாதி போன்ற கிராமங்களில் இரவு 10:30 மணி வரை, 15க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர் - சிறுமியர் தங்கள் அம்மாக்களுடன் காத்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us