தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி

 மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி

 மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி


ADDED : மார் 28, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 06:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் குண்டு வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.4000 வரை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மிளகாய் சந்தை நடக்கிறது. நேற்றைய சந்தைக்கு 400 குவிண்டால் குண்டு மிளகாய் வத்தலை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

கடந்த வாரம் முதல் தர பெரியவகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.32,000க்கும், 2ம் தர சிறிய வகை குண்டு வத்தல் ரூ.28,000க்கும் விற்பனையானது. நேற்றைய சந்தையில் விலை ரூ.4,000 சரிந்து பெரிய வகை குண்டு வத்தல் ரூ.28,000க்கும், சிறிய வகை குண்டு வத்தல் ரூ.24,000க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கடந்த வாரங்களை விட கூடுதல் வத்தல் மூடைகள் விற்பனைக்கு வந்ததால் வியாபாரிகள் இடையே போட்டியின்றி சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயிக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us