ADDED : ஜன 09, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதி பள்ளியில் 8ம் வகுப்பு பயின்றார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு செல்ல அந்த வழியே டூவீலரில் வந்தவரிடம் அழைத்து செல்ல கேட்டார். அந்த நபர் சிறுவனை ஏற்றிக்கொண்டார். ஆனால் டவுனுக்கு செல்லாமல் குலவணிகர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பிய சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுவனின் பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வக்கீல் செந்தில்குமார் என தெரிந்தது. அவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.