sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்று சீன கொடி: இன்று இன்னொரு வெடி: டிசைனர்களால் திமுக.,வுக்கு விழுகுது அடி

/

அன்று சீன கொடி: இன்று இன்னொரு வெடி: டிசைனர்களால் திமுக.,வுக்கு விழுகுது அடி

அன்று சீன கொடி: இன்று இன்னொரு வெடி: டிசைனர்களால் திமுக.,வுக்கு விழுகுது அடி

அன்று சீன கொடி: இன்று இன்னொரு வெடி: டிசைனர்களால் திமுக.,வுக்கு விழுகுது அடி


UPDATED : மார் 06, 2024 01:16 PM

ADDED : மார் 04, 2024 11:43 AM

Google News

UPDATED : மார் 06, 2024 01:16 PM ADDED : மார் 04, 2024 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சமீபத்தில் சீனக் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட்களுடன் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட நிலையில், தற்போது ஆங்கிலத்தில் தவறாக பொருள்படும்படியான வாசகத்துடன் திமுக.,வை சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்துள்ளதால் அக்கட்சி கலக்கமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இதற்காக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

அதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட்கள் இடம்பெற்றிருந்தது. இஸ்ரோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் விளம்பரத்தில் திமுக அமைச்சரே தவறான புகைப்படத்தை வெளியிட்டதை மோடியும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கமளித்த அனிதா ராதாகிருஷ்ணன், ''சிறு தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்த தவறு. விளம்பரத்தை டிசைன் செய்தவர் தவறுதலாக அந்த புகைப்படத்தை போட்டுவிட்டார்'' என்றார். எதுவாகினும், விளம்பரம் வெளியிட்டவர் அதனை சரிபார்த்து ஒப்புதல் கொடுத்த பின்னர் தானே பிரசுரமாகும், அப்படியிருக்கையில் இதைக்கூட கவனிக்காமல் இருந்துவிட்டார்களா? என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், மார்ச் 1ம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடினார். அதன் ஒருபகுதியாக நேற்று (மார்ச் 3) சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக 576 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது தொடர்பான போஸ்டர்களில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தின் பின்னணியில் PRIDE OF TAMILNADU (தமிழகத்தின் பெருமை) என அச்சிடுவதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU (தமிழகத்தின் மணமகள்) என ஆங்கிலத்தில் தவறாக அச்சிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகியுள்ளது.

ஏற்கனவே சீன கொடியுடன் விளம்பரம் வெளியிட்டு திமுக சர்ச்சையில் சிக்கிய நிலையில், இப்போது ஆங்கிலத்தில் தவறான பொருள் தரும்படியான வாக்கியத்துடன் முதல்வர் போட்டோவுடன் போஸ்டர் ஒட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர் திமுக.,வினர்.






      Dinamalar
      Follow us