ADDED : பிப் 02, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு போக்குவரத்து கழக தொலைதுார பஸ்களில், பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வழியாக, பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படுகிறது.
வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் முன்பதிவு செய்யும் பயணியரில், மாதந்தோறும் மூன்று பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு ரொக்கப் பரிசாக தலா, 10,000 ரூபாய் வழங்கப்படும்.
அதன்படி, கடந்த மாதத்திற்கான மூன்று வெற்றியாளர்களை, அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். இசக்கி முருகன், சீதா, இம்தியாஷ் ஆரிப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பரிசு வழங்கப்பட உள்ளது.

