ADDED : அக் 07, 2025 06:52 AM

விளாத்திகுளம் : மொபட்டில் சென்ற கிறிஸ்துவ மத போதகர், பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், பனையடிப்பட்டியை சேர்ந்தவர் அருள்நேசன், 60, கிறிஸ்துவ மத போதகர்.
நேற்று முன்தினம் இரவு, விளாத்திகுளம் செல்வதற்காக எட்டையபுரம் சாலையில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விளாத்திகுளத்தில் இருந்து துாத்துக்குடி சென்ற தனியார் பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மொபட்டில் மோதியது.
இதில், மொபட்டில் இருந்து விழுந்த அருள்நேசன் மீது, பஸ்சின் பின்பக்க டயர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார். விளாத்திகுளம் போலீசார், அருள்நேசனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பஸ் டிரைவர் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி, 44, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.