ADDED : டிச 11, 2024 07:06 PM

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் 08
நம்பிக்கை பிறந்தது
இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்தார். யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து மட்டுமின்றி உலகத்தில் இருந்தும் அழித்துவிட வேண்டும் என்பதே ஹிட்லரின் நோக்கம். இதனால் யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறினர். அந்த நேரத்தில் வில்லியம் என்பவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து யூதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார்.
இதையறிந்த ஹிட்லரின் படைகள் அவரையும், அவரது மகள்களான கொர்ரி, பெட்சியை சிறையில் அடைத்தது. வில்லியம் சிறையிலேயே இறந்து விட்டார். இருந்தாலும் அவரது மகள்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சிறையில் இருந்த யூதக்கைதிகளுடன் இணைந்து, 'இந்த மக்களை ஆபத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்' என ஜெபம் செய்தனர். இதனால் கைதிகளின் மனதில் புதிய நம்பிக்கை பிறந்தது.
