ADDED : டிச 08, 2024 06:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -05
வயதானாலும்...
ஆலியா வயது மூப்பு காரணமாக படுக்கையிலேயே இருந்தாள். ஆனாலும் அவளது முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாக இருப்பதை பிறரால் உணர முடிந்தது.
இதுகுறித்து, ''அம்மா... நோயால் சிரமப்படுகிறீர்கள். இருந்தாலும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்'' எனக்கேட்டாள் மகள் பிரிட்டா. ''நீ சொல்வது உண்மை. கால்கள் தள்ளாடுகிறது. கண்கள் மங்கிவிட்டது ஆனாலும் என் வாழ்வின் இனிமையான காலம் நெருங்குவதை உணர்கிறேன். அதாவது ஆண்டவரை காணும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது அல்லவா'' என மகிழ்ந்தாள்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அவளது உயிர் பிரிந்தது. உடலுக்குதான் வயது. பண்பட்ட மனதிற்கு வயது இல்லை.