ADDED : டிச 14, 2024 06:50 PM

வெற்றி பெற...
எழுத்துலகில் சாதனை படைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் டூமாஸ். இவரின் சாதனைக்கு காரணம் இவரது தந்தை. இவர் நெப்போலியனின் படையில் போர் வீரனாக பணியாற்றியவர். பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றவர். அங்கு தான் பார்த்தவைகளை மிகவும் சுவையாக மகனுக்கு கதைபோல் சொல்லுவார். ஆனால் இது வெகுகாலம் நீடிக்கவில்லை. டூமாஸ் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார்.
ஆனாலும் தாய் மூலம் தந்தை சொன்ன கதைகளை மேலும் கேட்டறிந்தார். தொடர்ந்து பைபிள், ராபின்சன் க்ரூசோ நாவலை ஆவலோடு படித்தார். இப்படி தான் கேட்ட, படித்த புத்தகங்களைக் கொண்டு தானும் கதை எழுத தொடங்கினார். தனது நாவல்களை நீலநிறத்தாளிலும், கவிதைகளை மஞ்சள் நிறத்தாளிலும், கட்டுரைகளை சிவப்பு நிறத்தாளிலும் எழுதினார். எடுத்துக் கொண்ட பணியில் ஆர்வமாக இருந்ததால் நான் இந்த வெற்றியை பெற்றேன் என்றார் டூமாஸ்.