UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 10:44 PM

'ஓம்' புதிய ரிலீஸ் தேதி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படம் ஓம். அக்., 16ல் ரிலீசாகும் என அறிவித்த நிலையில், ரஜினியின் ‛ஜெயிலர் 2’ அந்த சமயத்தில் வருவதால், ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது நவ., 20ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
இயக்கமா... நடிப்பா?
- ஜேசன் சஞ்சய் பதில்
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல்படமான ‘சிக்மா’ திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்களுடன் படம் பார்த்த பின்னர் பேசிய ஜேசன், ‘மூன்று ஆண்டுகளாக இந்த படத்துடன் பயணித்தேன். ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. அடுத்து நடிப்பா, இயக்கமா என இன்னும் முடிவு செய்யவில்லை. படம் பார்த்த அம்மா, தங்கை வாழ்த்தினர்’ என்றார்.
நடிகையின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்
கன்னட நடிகையான ரச்சிதா ராம், தமிழில் ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்தார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு, சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுத்த பின்னர், ஆர்வ மிகுதியில், அவரது கன்னத்தை இரு கைகளாலும் கிள்ளி கொஞ்சி சென்றார். அவரது இந்த திடீர் செய்கையால் அதிர்ச்சியடைந்த ரச்சிதா, பின்னர் அதை ஏற்றுக் கொண்டது போல சிரித்தார்.
‘பாக்கெட் நாவல் படமல்ல
அதற்கும் மேலானது’
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பாக்கெட் நாவல். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் முதன்மை வேடத்தில் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மாளவிகா வெளியிட்ட பதிவில், ‘சில படங்கள் உருவாகும்போது, அவை தனக்கான ஒரு குட்டி உலகமாக மாறிவிடும். அப்படிப்பட்ட இந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். 'பாக்கெட் நாவல்' வெறும் படம் மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ‘ஆடை’ போன்ற
படத்தில் நடிக்க மாட்டேன்:- அமலாபால்
குழந்தை பிறப்புக்கு பின் சிறிதுகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அமலாபால், மீண்டும் நடிக்க உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ஒரே மாதிரி வேடத்தில் நடிக்க விரும்பவில்லை. எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளின் விஷயத்தில் என்னை திருப்திப்படுத்துவது சற்று கடினம். மீண்டும் ‛ஆடை’ போன்ற ஒரு படத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டால், நிச்சயம் நடிக்க மாட்டேன்’ என்றார். ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி அமலாபால் நடித்தது போன்று அவரது வேடம் அமைந்திருந்தது.
சுக்குகாபி கூட விற்பேன்
சுயமரியாதையை விட மாட்டேன்: டி.ராஜேந்தர்
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர், தன், 71வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். அவர் அளித்த பேட்டி, ‘நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நான் இல்லை. இப்போது ‛கன்னடத்து பைங்கிளி’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளேன். இதில் இளையராஜா ஒரு பாடலை பாடி உள்ளார். அவர் பாடுவாரா என்ற தயக்கம் இருந்தது. நான் கேட்டதும் மறுக்கவில்லை. என்னை வாழ வைத்த ரசிகர்களை மறக்க மாட்டேன். நான் தஞ்சைக்காரன், தன்மானம் மிக்கவன். சுங்குவார் சத்திரத்தில் சுக்குகாபி விற்றாலும் விற்பேனே தவிர சுயமரியாதையை விட்டு, சொர்க்கத்தை கூட விரும்ப மாட்டேன். நான் சென்னைக்கு தாடியுடன் தான் வந்தேன். கோடியுடன் வரவில்லை’ என்றார்.
டோரதி படத்துக்கு
மம்மூட்டி பாராட்டு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்து, கடந்த வாரம் வெளியான படம் டோரதி. இப்படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. மலையாள நடிகர் மம்மூட்டி இந்த படத்தை பாராட்டி உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவில், ‘மம்மூட்டி சார், உங்கள் நேரத்திற்கும், வாழ்த்துக்கும், ‘டோரதி’ குறித்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. இது எனக்கு முக்கியமானது. நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகம் அளிப்பவர்’ என குறிப்பிட்டுள்ளார்.
கு ழந்தை பிறப்புக்கு பின், சிறிதுகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அமலாபால், மீண்டும் நடிக்க உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ஒரே மாதிரி வேடத்தில் நடிக்க விரும்பவில்லை; எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளின் விஷயத்தில் என்னை திருப்திபடுத்துவது சற்று கடினம். மீண்டும் ‛ ஆடை போன்ற ஒரு படத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டால், நிச்சயம் நடிக்க மாட்டேன்’ என்றார்.
க ன்னட நடிகையான ரச்சிதா ராம், தமிழில் ரஜினியின் கூலி படத்தில் நடித்தார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு, சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுத்த பின், ஆர்வ மிகுதியில் அவரது கன்னத்தை இரு கைகளாலும் கிள்ளி கொஞ்சினார். அவரது இந்த திடீர் செய்கையால் அதிர்ச்சியடைந்த ரச்சிதா, பின்னர் அதை ஏற்றுக் கொண்டது போல சிரித்தார்.
மு தல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முத ல்படமான சிக்மா திரைக்கு வந்து, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்களுடன் படம் பார்த்த பின்னர் பேசிய ஜேசன், ‘மூன்று ஆண்டுகளாக இந்த ப டத்துடன் பயணித்தேன். ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். நடிக்க வே ண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து நடிப்பா, இயக்கமா என இன் னும் முடிவு செய்யவில்லை. படம் பார்த்த அம்மா, தங்கை வாழ்த் தினர்’ என்றார்.
இ யக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர், தன், 71வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். அவர் அளித்த பேட்டி, ‘நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நான் இல் லை.
இப்போது கன்னடத்து பைங்கிளி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளேன். இதில் இளையராஜா ஒரு பாடலை பாடி உள்ளார். அவர் பாடுவாரா என்ற தயக்கம் இருந்தது; நான் கேட்டதும் மறுக்கவில்லை. என்னை வாழ வைத்த ரசிகர்களை மறக்க மாட்டேன்.
நான் தஞ்சைக் காரன், தன்மானம் மிக்கவன். சுங்குவார் சத்தி ரத்தில் சுக்கு காபி வி ற்றாலும் விற்பேனே தவிர சுயமரியாதையை விட்டு, சொர்க்கத்தை கூட விரும்ப மாட்டேன். நான் சென்னைக்கு தாடியுடன் தான் வந்தேன்; கோடியுடன் வர வில்லை’ என்றார்.
ரா ஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படம் ஓம் . அக்., 16ல் ரிலீஸாகும் என அறிவித்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் – 2 அந்த சமயத்தில் வருவதால், ரிலீஸை தள்ளி வைத்து, வரும் நவ., 20ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
