ADDED : ஏப் 09, 2026 07:35 AM
மார்பிங் போட்டோ ஜான்வி வேதனை
தெலுங்கில் ராம் சரண் உடன் 'பெத்தி' படத்தில் நடித்துள்ளார் ஜான்வி கபூர். ஏப்., 30ல் படம் ரிலீஸாகிறது. ஜான்வி கூறுகையில், ''ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எனது போட்டோவை ஆபாசமாக சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை. 15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டனர். இதுபோன்ற விஷயங்களில் ஒழுக்கம் கிடையாது, இதை நாம் சகித்து தான் ஆக வேண்டும் என என்னை நானே தேற்றிக் கொண்டேன். அதேபோல் புகைப்பட கலைஞர்கள் நடிகைகள், பெண்களின் அங்கங்களை தவறாக ஜூம் செய்து படம் பிடிப்பது அநாகரிகமானது'' என்றார்.
கை நழுவிய படம்... உதவிய நயன்தாரா...
நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் டிராப் ஆனது. அடுத்து அவர் இயக்கிய 'எல்ஐகே' படம் நீண்ட இழுபறிக்கு பின் நாளை ரிலீசாகிறது. இப்பட விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், ''ஒரு பெரிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து கடைசி நேரத்தில் கை நழுவி போனது. தாலி கட்டும் முன் மாப்பிள்ளை சென்றுவிட்டால் அந்த மணப்பெண்ணுக்கு திருமணம் நடப்பது எவ்வளவு கஷ்டமோ, அதுபோன்ற கஷ்டத்தில் இருந்தேன். இந்த எல்ஐகே படத்திற்காக நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக பெற்ற அட்வான்ஸை கொடுத்து உதவினார்'' என்றார்.
வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன்
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியார் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படம் ஏப்., 17ல் ரிலீஸாகிறது. கவுதம் கூறுகையில், 'இது பக்கா ஆக் ஷன் படம், இதில் நடித்தபோது அடிபட்டது. இப்படம் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் கஷ்டப்படவில்லை. தாத்தா முத்துராமனை ஏஐ கேரக்டரில் உருவாக்கி நடிக்க ஆர்வமில்லை. மனைவி மஞ்சிமா எல்லா விஷயத்திலும் எனக்கு உறுதுணையாக உள்ளார். வாழ்வில் சில விஷயங்களில் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் அழுவேன். பின்னர் வழக்கம்போல் உற்சாகமாகிவிடுவேன்'' என்றார்.
அட்லி, அல்லு அர்ஜுனின் 'ராக்கா'
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் அவரது 22வது படத்தின் தலைப்பு 'ராக்கா' என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக் ஷன் கலந்த சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. முதல் பார்வை போஸ்டரில் மனித முகம், மிருக கையுடன் வித்தியாசமான தோற்றத்தில் அல்லு அர்ஜுன் உள்ளார்.
ஜெயிலர் 2' : தவிர்த்த ஷாரூக்கான்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. முதல்பாகத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் இதில் தொடருகின்றனர். புதிதாக ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் தவிர்த்துவிட்டாராம். தனது கிங் படத்திற்காக புது லுக்கில் இருக்கும் ஷாரூக் அதை வேறு படத்தில் தொடர விரும்பவில்லையாம். இதுபற்றி ரஜினியிடமும் அவர் பேசி விட்டா
என்டிஆர், நீல் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஒரு படத்தில் நடிக்கிறார். இரு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம் இது. இப்படம் நிறுத்தப்பட்டதாக செய்தி பரவுகிறது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில் ''படம் நின்றதாக பரவும் செய்தி உண்மையல்ல. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கிறது. பொய்யான தகவல்களை நம்பாதீர்கள். எங்களிடமிருந்து வரும் தகவல்களே உண்மை'' என்கின்றனர்.
