ADDED : செப் 25, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திரைப்பட இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானார்.
பிரபுதேவா - வடிவேலு நடித்த மனதை திருடி விட்டாய், ஒரு பொண்ணு ஒரு பையன் படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்தி, 59. பம்மலில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், சின்னத்திரை தொடர்களான நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட பலவற்றை இயக்கியுள்ளார்.
ஒரு வாரமாக உடல் நலக்குறைவால் ஓமந்துா ரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.
இறுதிச்சடங்கு நாளை பம்மலில் நடக்க உள்ளது. இயக்குநர் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.