தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சினிமா: மதுரை

 சினிமா: மதுரை

 சினிமா: மதுரை


ADDED : ஜூன் 10, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐந்து ரூபாய் டாக்டராக ரஜினி...?

நடிகர் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்து அவர் மாற்றப்பட்டு சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்போது இவரும் மாற்றப்பட்டு அஷ்வத் மாரிமுத்து இயக்க போகிறார். சமீபத்தில் ரஜினிக்கு டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. அவர் டாக்டராக நடிக்கிறாராம். வட சென்னையில் ஜெயசந்திரன், திருவேங்கடம் என இரண்டு டாக்டர்கள் பிரபலம். ஐந்து ரூபாய் டாக்டர்கள் என மக்களால் அழைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரின் கதையை தழுவி இந்த படம் உருவாகிறதாம். ஜூன் 26ல் படப்பிடிப்பு துவங்குகிறது.

ரூ.300 கோடி வசூலை தாண்டியது 'பெத்தி'

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள படம் 'பெத்தி'. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து வெளியானது. படத்திற்கு விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் வசூல் நன்றாக உள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ.300.15 கோடி வசூலை கடந்துள்ளது.

செவிலியர்கள் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா

கங்கனா ரணாவத் நடிப்பில் ஜூன் 12ல் ரிலீஸாகும் ஹிந்தி படம் 'பாரத் பாக்ய விதாதா'. மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரை காமா மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் காப்பாற்றினா ர். இந்த நிகழ்வை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செவிலியராக கங்கனா நடித்துள்ளார். அவர் கூறுகையில், ''மருத்துவ துறையில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் அணியும் உடை ஆங்கிலேயர் காலத்து தாக்கத்தை கொண்டுள்ளது. இந்திய தட்பவெட்ப நிலைக்கு இந்த உடை பொருந்துவதில்லை. இதை அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றணும்'' என்கிறார்.

முதல்வர் பிறந்தநாள் : ரீ ரிலீஸாகும் 'ஜில்லா, மெர்சல்'

நடிகர் விஜய் தமிழக முதல்வராகிவிட்டார். அவர் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி உள்ளது. ஜூன் 22 அவரது பிறந்தநாளை முன்னிட்டு அப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நடக்காது போல் தெரிகிறது. இதனால் அவரது முந்தைய படங்களான 'ஜில்லா' மற்றும் 'மெர்சல்' ஆகியவற்றை ஜூன் 19ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us