ADDED : ஜன 20, 2026 09:09 AM

சென்னை: ''சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின், 25 நாட்கள் நடக்கும் சைக்கிளத்தான் பேரணி, வரும் 28ம் தேதி துவங்குகிறது,'' என, பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி., சரவணன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
'வந்தே மாதரம்' சைக்கிளத்தான் பேரணி, வரும் 28ம் தேதி துவங்கி, பிப்., 22 வரை நடக்க உள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இதில், 65 பெண்கள், 65 ஆண்கள் என, இரு குழுக்களாக, 130 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள், 25 நாட்கள், 6,553 கி.மீ, சுற்றி வர உள்ளனர்; அதில் 11 பேர் தமிழர்கள்.
ஒரே நேரத்தில், குஜராத்தின் லக்பத் கோட்டையில் இருந்தும், மேற்கு வங்கம், பக்காலி பகுதியில் இருந்தும், இந்த குழுக்குள் பயணத்தை துவங்குகின்றன.
நிறைவு விழா, பிப்., 22ல், கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சென்னை விமான நிலைய டி.ஐ.ஜி., பொன்னி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

