sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தோல் கழிவில் இருந்து நுால் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பகிர்கிறது சி.எல்.ஆர்.ஐ.,

/

தோல் கழிவில் இருந்து நுால் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பகிர்கிறது சி.எல்.ஆர்.ஐ.,

தோல் கழிவில் இருந்து நுால் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பகிர்கிறது சி.எல்.ஆர்.ஐ.,

தோல் கழிவில் இருந்து நுால் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பகிர்கிறது சி.எல்.ஆர்.ஐ.,


ADDED : அக் 10, 2024 12:31 AM

Google News

ADDED : அக் 10, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தோல் பொருட்கள் தயாரிப்பின்போது வெளியேறும் திடக்கழிவில் இருந்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஜவுளி துறையில் பயன்படுத்த கூடிய நுால் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த தொழில்நுட்ப உரிமையை, கே.எச்.எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு, சி.எல்.ஆர்.ஐ., வழங்கிஉள்ளது.

சுற்றுச்சூழல் மாசு


இந்தியாவில் ஆடு, மாடுகளில் இருந்து கிடைக்கும் கச்சா தோலை பயன்படுத்தி காலணி, பை, 'ஷூ, மணிபர்ஸ், கோட்' உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

தோலை எடுக்கும் போது கிடைக்கும் துவக்க நிலை கழிவு, தோலை பதப்படுத்தி, 'ஷீட்' உருவாக்கும்போது ஓரத்தை சரிசெய்யும் போது வெளியேற்றப்படும் கழிவு போன்றவற்றின் வாயிலாக, தோல் திடக்கழிவு அதிகளவில் வெளியேறுகிறது. இதை அப்புறப்படுத்த, தீ வைத்தால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

சென்னை கிண்டியில் செயல்படும் சி.எஸ்.ஐ.ஆர்., - சி.எல்.ஆர்.ஐ., நிறுவனம், தோல் பொருட்கள் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறது.

அதன்படி, தற்போது தோல் திடக்கழிவு மற்றும் பருத்தி, மூங்கில் இழையை பயன்படுத்தி, நுால் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன தினம், கிண்டி சி.எல்.ஐ.ஆர்., வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தமிழக தொழில் துறை செயலர் அருண்ராய், சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், அருண்ராய் பேசும்போது, ''மத்திய அரசின் ஆய்வகங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. உற்பத்தி துறையில் அதிக நிறுவனங்கள் தொழில் துவங்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தோல் பொருட்கள் தயாரிப்பின்போது வெளியேறும் திடக்கழிவில் இருந்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், ஜவுளி துறையில் பயன்படுத்த கூடிய நுால் தயாரிக்கும் தொழில்நுட்ப உரிமையை, கே.எச்.எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு, சி.எல்.ஆர்.ஐ., வழங்கியது.

இதுகுறித்து, சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் விஞ்ஞானி நிசாத் பாத்திமா கூறியதாவது:

தோல் பொருட்கள் தயாரிப்பின்போது பெருமளவு தோல் திடக்கழிவு வெளியேறுகிறது. 'வேஸ்ட் டூ வெல்த்' எனப்படி, கழிவை நல்ல முறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம், தோல் துறையில் கண்டுபிடிக்கப்படுகிறது.

சந்தையில் விற்கும்


அதன் அடிப்படையில், தோல் திடக்கழிவு, இயற்கையில் கிடைக்கும் பருத்தி, மூங்கில் இழை நார்களுடன் ஒன்றாக கலந்து, ஜவுளி துறைக்கு உகந்த நுால் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரசாயனம், தண்ணீர் சேர்க்கப்படவில்லை. இந்த நுாலில் இருந்து ஜவுளி, துணியால் செய்யப்பட்ட காலணி, துணி பை, ஷூ லேஸ் போன்ற பொருட்களை தயாரிக்கலாம். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.

சி.எல்.ஆர்.ஐ., கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கே.எச்.எக்ஸ்போர்ட் நிறுவனம் பொருட்களை தயாரித்து, சந்தையில் விற்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us