தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹாசனாம்பா கோவில் மேம்பாடு நிதி ஒதுக்கீடுக்கு முதல்வர் உறுதி

ஹாசனாம்பா கோவில் மேம்பாடு நிதி ஒதுக்கீடுக்கு முதல்வர் உறுதி

ஹாசனாம்பா கோவில் மேம்பாடு நிதி ஒதுக்கீடுக்கு முதல்வர் உறுதி

1


UPDATED : நவ 09, 2026 08:07 PM

ADDED : நவ 08, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 08:07 PM ADDED : நவ 08, 2026 07:24 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: ஹாசனாம்பா கோவில் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது பற்றி, கலெக்டருடன் பேசுவதாக, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

ஹாசன் டவுனில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் முதல்வர் சிவகுமார், அவரது மனைவி உஷா இன்று (நவ.,8) சாமி தரிசனம் செய்தனர். பின், முதல்வர் அளித்த பேட்டி:

எடியூரப்பா முதல்வராக இருந்த போது, ஹாசனாம்பா கோவில் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கினார். பின், நிதி கேட்டு அரசுக்கு எந்த முன்மொழிவும் வரவில்லை. ஆனால், ஊடகங்கள் அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறுகின்றன. கோவில் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது பற்றி, கலெக்டருடன் பேசுவேன்.

அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. விமர்சிப்பதை விட அவர்களுக்கு என்ன வேலை உள்ளது. வாக்குறுதி திட்டங்கள் வெற்றி பெற்று இருப்பதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

விவசாயிகளுக்காக வறட்சி மானிய தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளோம். பால் விலை உயர்வால் விவசாயிகள் பயன் அடைகின்றனர்.

பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக இல்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கர்நாடகாவில் பால் விலை குறைவு தான். சர்க்கரைக்கு விலை நிர்ணயிப்பது மத்திய அரசின் பொறுப்பு. கரும்பு விவசாயிகள் போராடுவதில் தவறு இல்லை.

மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க பெங்களூரு வரும் பிரதமர் மோடியிடம், மாநிலத்தில் நிலவும் வறட்சி உட்பட அனைத்து பிரச்னைகள் பற்றியும் விவாதிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us