மாணவர்கள் கல்விக்கு எதிராக பேசினால் ஓரணியில் தமிழ்நாடு ஓட,ஓட விரட்டும்: முதல்வர் ஸ்டாலின்
மாணவர்கள் கல்விக்கு எதிராக பேசினால் ஓரணியில் தமிழ்நாடு ஓட,ஓட விரட்டும்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 14, 2025 09:22 PM

சென்னை: தமிழக மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு ஓட, ஓட விரட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;
காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளை விட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது தி.மு.க., மாணவர் அணி.
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட, ஓட விரட்டும், எங்கள் திராவிட கூட்டம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

