தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க பிரிட்டன் முதல் தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க பிரிட்டன் முதல் தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
UPDATED : ஜூலை 05, 2024 08:04 PM
ADDED : ஜூலை 05, 2024 07:59 PM

சென்னை: தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த பிரிட்டன் பார்லி.,தேர்தலில் இலங்கை தமிழ் பெண் உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கூறுகையில் என் மீதும் தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும், உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன் என்றார்.
இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது: பிரிட்டன் பார்லி.,யில் முதல் இலங்கை தமிழ் பெண் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.வெற்றியின் மூலம் தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்து உள்ளார் .மேலும் தமிழ் சமூகத்திற்கு பெருமையை தேடி தரவேண்டும். என பதிவிட்டு உள்ளார்.