உள்ளடக்கத்திற்கு செல்ல

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 3வது பகுதிக்கு ஒப்புதல் தேவை;பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 3வது பகுதிக்கு ஒப்புதல் தேவை;பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : மார் 13, 2026 10:26 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 3வது பகுதிக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில்; தமிழகத்தில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 3வது பகுதிக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான நிதியையும் விடுவிக்க வேண்டும், இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
